தமிழர்களின் வாழ்வாதாரத்தை மாநில அரசு பாதுகாக்க தவறிவிட்டது, டி.டி.வி.தினகரன் அணி ஆலோசனை கூட்டத்தில் கண்டனம்


தமிழர்களின் வாழ்வாதாரத்தை மாநில அரசு பாதுகாக்க தவறிவிட்டது, டி.டி.வி.தினகரன் அணி ஆலோசனை கூட்டத்தில் கண்டனம்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:00 AM IST (Updated: 6 Feb 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நடந்த டி.டி.வி.தினகரன் அணி ஆலோசனை கூட்டத்தில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறியதாக மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி சுபலட்சுமி திருமண மண்டபத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் அமுதவிழி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளரும், மாநில அமைப்பு செயலாளருமான கே.கே.உமாதேவன் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளரும், மதுரை மண்டல பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன், மாநில அம்மா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் இறகுசேரி பழனிசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் இறகுசேரி முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஊரவயல் ராமு, புதுவயல் சுப்பிரமணியன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், காரைக்குடி நகர மகளிரணி நிர்வாகி பத்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளை சிவகங்கை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக அயராது பணியாற்றிய கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது. காவிரி நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் நடந்துகொள்ளும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க தவறியதுடன், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை காட்டாமல் உள்ள மாநில அரசை கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் காரைக்குடி நகரச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார். 

Next Story