தொலைதூர கல்வி மையங்களை அமைப்பதிலும் மோசடி; துணைவேந்தருக்கு உடந்தையாக இருந்த இயக்குனர் தலைமறைவு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையங்களை அமைப்பதிலும் மோசடி நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையங்களை அமைப்பதிலும் மோசடி நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துணைவேந்தருக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட தொலைதூர கல்விமைய இயக்குனர் மதிவாணன் தலைமறைவாகிவிட்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு, லஞ்சப்பணத்தை பெற்று கொடுப்பதில் தொலைதூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதிவாணன் விடுப்பு எழுதி கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். முன்ஜாமீன் பெற ஐகோர்ட்டை அணுக அவர் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் கோவை மண்டல பகுதியில் மொத்தம் 118 கல்லூரிகள் உள்ளன. இதுதவிர தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொலைதூர கல்வி மையங்கள் உள்ளன. இந்த தொலைதூர கல்வி மையங்களை நடத்த முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கணபதி பொறுப்பு ஏற்றபின்னர் ஏராளமான தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மையங்களை அமைக்க துணைவேந்தருடன், இயக்குனர் மதிவாணன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மற்ற மோசடிகளுக்கும் அவர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
மதிவாணன் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிவாணன் மற்றும் துணைவேந்தர் செல்போன் உரையாடல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மதிவாணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story