தொழிற்சாலை நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் கலந்துரையாடல்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்துறைக்கான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கருப்பண்ணன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தனர்.
அம்பத்தூர்,
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ‘அய்மா’ மையத்தில் தொழில்துறைக் கான நிறை, குறை குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சாலை நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதில் அம்பத்தூர் தொழிற்சாலை நிர்வாகிகள், அய்மா சங்கத்தின் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை வளாகத்தில் பழுதடைந்து உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தினார்கள்.
சென்னை மாநகராட்சியில் அம்பத்தூர் மண்டலத்தில் அதிகமான சொத்து வரி, தொழில் வரி என மிக கணிசமான தொகையை செலுத்துவதாகவும், அந்த தொகையில் குறைந்தது 10 சதவீதம் தொகை அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகள் அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் பேசிய அமைச்சர்கள், ‘ரத்து செய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொழிற்சாலை நிர்வாகிகள் எங்களிடம் தெரிவித்தனர். அவர்களின் தரப்பில் எழுப்பிய அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்’ என்றனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அலெக்சாண்டருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர் கூட்டம் முடியும் வேளையிலே வந்ததால் நிர்வாகிகளால் பல்வேறு குறைகளை தெரிவிக்க முடியவில்லை.
மேலும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் இந்த கூட்டம் பெயரளவில் மட்டுமே நடந்து முடிந்தது என பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story