சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி ‘சிலம்பு சுற்றுலா’ விரைவில் அறிமுகம், அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்
சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி, சிலம்பு சுற்றுலா விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தேனியில் அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தேனி,
தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:-
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் தொல்லியல் துறை தலைவர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். கண்ணகி கோவிலை புனரமைத்து, வழிபாட்டு தலமாக மாற்ற கேரள அரசு தடை போடாது. கோவிலை புனரமைக்க பல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கண்ணகி கோவிலை வழிபாட்டு தலமாக புனரமைப்பதா? அல்லது தமிழ் தொல்லியல் சான்றாக பாதுகாப்பதா? என்பதை பார்க்க வேண்டும். கேரள அரசுடன் ஒரு மாதத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி கண்ணகி கோவில், மதுரையில் கோவலன் இறந்ததாக கூறப்படும் இடம் போன்றவற்றை சிறப்பிக்கும் வகையில் சிலம்பு சுற்றுலா விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
கேரள, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழ் பள்ளிகளில் தமிழ் வழியில் கற்றல் தொடர அண்டை மாநில அரசுகளுக்கு எல்லா விதங்களிலும் உறுதுணையாக இருப்போம். ஒரே பாரதம்-உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் காஷ்மீருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதன்படி, காஷ்மீரில் 100 பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. இதற்கான ஆசிரியர்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிலும் 100 பள்ளிகளில் காஷ்மீரி மொழி கற்றுக் கொடுக்கப்படும். அதேபோல், பிற மாநிலங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பிற மொழிகள் தமிழகத்தில் கற்றுக் கொடுப்பதோடு, அந்தந்த மாநிலங்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றம் செய்ததில் மு.க.ஸ்டாலின் சொல்லும் கருத்தில் உண்மையில்லை. தமிழ்நாடு பழைய இல்லம், தமிழ்நாடு புதிய இல்லம் என்று இருந்ததை, தமிழ்நாடு இல்லம் வைகை, தமிழ்நாடு இல்லம் பொதிகை என்று தான் மாற்றப்பட்டு உள்ளது. இந்த விசயத்தில் ஒன்றும் இல்லாததை ஊதி பெரிதாக்குகிறார்கள்.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை பொறுத்தவரை இந்த மாவட்டத்தின், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உகந்தது? 1,000 பேராவது வேலைவாய்ப்பு பெறுவார் களா? என்பதை ஆராய்ந்து அரசு முடிவு எடுக்கும். நீட் தேர்வை எதிர்கொள்ள நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கல்வித்தரத்தை பண்மடங்கு உயர்த்த அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாது என்ற நிலை வராது. புதிய பாடத்திட்டத்தில் புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதோடு, விளையாட்டு மற்றும் கலைக்கும் சரிசம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ.40 கோடி நிதி தேவை. இதுவரை பல்கலைக்கழகத்துக்கு ரூ.38 கோடி கிடைத்துள்ளது. இதில், தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி உள்ளது. அமெரிக்காவில் இருந்து பல்வேறு நபர்களால் ரூ.20 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ரூ.2 கோடி தேவை என்ற நிலையில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நிதி திரட்டி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இதுவரை ரூ.70 லட்சம் திரட்டப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.1 கோடியே 30 லட்சம் தேவை. இந்த மாதம் இறுதிக்குள் நிதி முழுமையும் கொடுக்கப்படும். அங்கு தமிழர் ஒருவர் பேராசிரியராக நியமிக்கப்பட உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story