திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்ட முதியவர்
பட்டா மாறுதல் பெற அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த முதியவர் திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்ட முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர்,
தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்காக அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதன்காரணமாக பெண்கள் பலர் விண்ணப்பம் பெற்று அவற்றை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து வந்தனர். கடந்த மாதம் 22-ந்தேதி முதல் பெறப்பட்டு வந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்திலும் பெண்கள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. பெண்கள் பலர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அலுவலக நேரமான மாலை 5 மணியை கடந்தும் ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வந்திருந்தனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் 656 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் அலுவலக அதிகாரிகள் மண்டல அலுவலகத்தின் வெளிக்கதவை மூடும்படி கூறினார்கள். அதன்காரணமாக பணியாளர்கள் மண்டல அலுவலகத்தின் கதவை உள்பக்கமாக தாழிட்டு பூட்டினார்கள்.
திருப்பூர்-காங்கேயம் ரோடு நல்லூர் என்.எம்.பி.நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57). இவர் தனக்கு சொந்தமான 1,800 சதுர அடி பரப்பளவு உள்ள நிலத்தை தனது மகன் ரவிக்குமார் பெயரில் பட்டா மாறுதல் செய்ய விரும்பினார். இதற்காக கடந்த சில நாட்களாக நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு வந்து சென்றார். ஆனால் இ-சேவை மையத்தில் உள்ள இணையதள சேவை பழுது காரணமாக அவரை நாளை வாருங்கள், நாளை வாருங்கள் என்று பலமுறை கூறி திருப்பி அனுப்பி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இ-சேவை மைய அலுவலகத்தினர் நேற்று அவரை வரும்படி கூறியிருந்தனர். அதன்படி முதியவர் சோமசுந்தரம் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலகத்தின் 2 கதவுகளும் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததை அறிந்தார். இதனால் அங்கு நின்றிருந்த ஊழியரிடம் மாநகராட்சி இ-சேவை மையத்துக்கு செல்ல வேண்டும் கதவை திறங்கள் என்று கூறினார். ஆனால் உள்ளே யாரையும் அனுமதிப்பதில்லை என்று ஊழியர் கூறினார். பலமுறை கதவை திறக்கும்படி கூறியும் கதவை திறக்காததால் மனஉளைச்சல் காரணமாக சோமசுந்தரம் ஆத்திரம் அடைந்தார்.
இதன் காரணமாக உடனடியாக வீட்டுக்கு சென்ற அவர் தனது வீட்டில் இருந்து 2 பூட்டுகளை எடுத்து வந்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் 2 கதவுகளையும் வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டினார். இதனால் அலுவலகத்திற்குள் இருந்து யாரும் வெளியே வரமுடியவில்லை. அதுபோல் வெளியில் இருந்தும் யாரும் அலுவலகத்துக்குள் செல்ல முடியவில்லை. எனவே கதவை திறக்கும்படி பலர் கூறியும் சோமசுந்தரம் கதவை திறக்கவில்லை.
அலுவலக பணியாளர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து வெளியே வந்து சோமசுந்தரத்திடம் கதவை திறக்கும்படி கூறியும் அவர் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சோமசுந்தரத்திடம் பேசி சாவியை வாங்கி கதவை திறந்துவிட்டனர்.
அதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மாநகராட்சி 3-வது மண்டல அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story