வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்ட நிலம் கையகப்படுத்திய வழக்கு: கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நோட்டீசு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்ட நிலம் கையகப்படுத்திய வழக்கில் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நோட்டீசு வழங்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கொல்லம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த திட்டத்தில் வீடுகள் கட்ட கடந்த 1980-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. அந்த பகுதியை சேர்ந்த கே.பி.நடராஜன், கேசவமூர்த்தி, பூர்ணய்யா, குப்புவிஜயலட்சுமி ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் 45 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அரசு வழங்கிய விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறி நடராஜன் உள்ளிட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு சதுர அடிக்கு ரூ.5 வீதம் விலை வழங்க வேண்டும் என்று ஈரோடு முதலாம் சார்பு நீதிமன்றம் கடந்த 2002-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை அரசு சார்பில் வழங்கவில்லை. இதனால் மேல் முறையீடு மனு செய்யப்பட்டது.
பின்னர், அரசு சார்பில் பணம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டு, சிறிய அளவிலான தொகை வழங்கப்பட்டது. இதனால் மீண்டும் நிலுவை தொகை கேட்டு சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நில உரிமையாளர்கள் தரப்பு மற்றும் அரசு தரப்பு தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வந்தன. இந்தநிலையில் கடந்த 25-1-2018 அன்று ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியது. அதில், நடராஜன் உள்ளிட்ட நில உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.63 லட்சத்து 96 ஆயிரத்து 586-யை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வழங்காவிட்டால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக அசையும் பொருட்களை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அந்த ஜப்தி உத்தரவுடன் நேற்று நடராஜன், வக்கீல் சுப்பிரமணியன் மற்றும் கோர்ட்டு ஊழியர் (அமீனா) வெள்ளியங்கிரி ஆகியோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் ஜப்தி நோட்டீசுடன் கலெக்டர் அலுவலகம் அமைந்து உள்ள முதல் மாடிக்கு சென்றனர். ஆனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் இல்லை. எனவே கலெக்டரின் நேர்முக உதவியாளரை (நிலம்) சந்தித்து ஜப்தி நோட்டீசை வழங்கினர்.
இதுதொடர்பாக அவர், கலெக்டரிடம் பேசிவிட்டு பதில் அளிப்பதாகவும், 3 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவர்கள் ஜப்தி நோட்டீசை ஒப்படைத்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story