ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு,
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை மாற்றி தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்குவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் ஜாபர் சாதிக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணை தலைவர் அம்ஜத் பாட்ஷா, மாவட்ட செயலாளர் லுக்மான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story