குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்
கொடுவாய் அருகே குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் வந்து மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலைவகித்தார். கொடுவாய் அருகே பங்காம்பாளையம் ஆதிதிரா விடர் காலனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். காலிக்குடங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மனு கொடுப்பதற்கு அவர்களை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.
அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 80 குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பொதுக்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதமாக அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் சிரமம் அடைந்துள்ளோம். மேலும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கூலித்தொழிலாளியான எங்களால் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், அணைக்காட்டில் ஆதிதிராவிடர் காலனியில் ஆழ்குழாய் கிணறு மோட்டார், கைப்பம்பு கடந்த 4 மாதமாக பழுதடைந்து உள்ளது. குழந்தையப்பாநகர், கந்தசாமி நகர் பகுதியில் பல லட்ச ரூபாய் செலவு செய்து குடிநீர் குழாய் இணைப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கருமாரம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் பல மாதங்களாக மூடாமல் உள்ளன. மூகாம்பிகை நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். சேர்மன் கந்தசாமி நகரில் ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ரோடும் மிகவும் மோசமாக உள்ளது. 31-வது வார்டு மின்மயானம் அருகே ரோடு பழுதடைந்துள்ளது. அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) திருப்பூர் மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் மாநகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் 201 பேருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவசமாக வீடு வழங்க வேண்டும். நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் 35 குடும்பத்தினருக்கு முதலிபாளையம் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வேறு நபர்கள் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேறி உள்ளனர். எனவே பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு இடத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) மற்றும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரியத்தின் சார்பில் 50 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, 13 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை என 63 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

Related Tags :
Next Story