நெல்லிக்குப்பம் அருகே சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது 2 பேர் உடல் நசுங்கி பலி
நெல்லிக்குப்பம் அருகே சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மரப்பட்டறை தொழிலாளர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள நடுவீரப்பட்டில் தனியார் மரப்பட்டறை உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இதில் பணியாற்றிய புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தத்தை சேர்ந்த சம்மந்தம் என்பவர் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மரப்பட்டறை தொழிலாளர்கள் 24 பேர் ஒரு மினி லாரியில் நேற்று புதுச்சேரிக்கு புறப்பட்டனர். அங்கு துக்க நிகழ்ச்சி முடிந்ததும் அதே மினி லாரியில் மாலையில் நடுவீரப்பட்டிற்கு புறப்பட்டனர்.
மினி லாரியை நடுவீரப்பட்டை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் ஓட்டினார். இந்த மினி லாரி நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம்-திருமாணிக்குழி இடையே உள்ள சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த அன்பு(வயது 40), என்.மூலக்குப்பத்தை சேர்ந்த சீனிவாசன்(35) ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். காயமடைந்த அனைவரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர்.
அவர்களது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த நடுவீரப்பட்டை சேர்ந்த பாலமுருகன்(25), ராமநாதன்(29), வசந்தகுமார்(29), மனோகரன்(45), மண்ணாங்கட்டி(42), கானஞ்சாவடியை சேர்ந்த ஞானசேகரன்(38), தனசேகர்(28), சி.என்.பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம்(40), மாயவன்(62), மேலக்குடி சசிகுமார்(44), புவனகிரி சிவகுமார்(45), ராணிப்பேட்டையை சேர்ந்த சண்முகம்(39), சீத்தாராமன்(37), மாணிக்கவேல்(36), திருவதிகை கிருஷ்ணமூர்த்தி(52), கீழ்கவரப்பட்டு செல்வம்(37), புலியூர் பெத்தாங்குப்பம் ஏழுமலை(32) உள்பட 22 பேர் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பலியான 2 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விபத்து நிகழ்ந்ததும் மினி லாரி டிரைவர் ராஜீவ்காந்தி தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story