ஆந்திராவில் நெல் அறுவடை தொடங்க உள்ளதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் கூடுதலாக வந்து சேர வாய்ப்பு
ஆந்திராவில் நெல் அறுவடை தொடங்க உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் கூடுதலாக வந்து சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக-ஆந்திர அரசுகள் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தை தீட்டின. இதன்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி.யாக மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடவேண்டும்.
அதன்படி டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 2-ந்தேதி பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், அதன்பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 2,450 கனஅடிவீதம் திறக்கப்பட்டு வருகிறது.
கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் ஆந்திராவில் கிருஷ்ணா நதி கால்வாயில் பாய்ந்து வரும்போது வழி நெடுகிலும் உள்ள மதகுகள் மூலமாக விவசாயிகள் பயன்பெற தண்ணீர் திறக்கப்படும். அங்குள்ள விவசாயிகளின் தேவைகள் நிறைவேறிய பிறகு தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரும்.
தற்போது கண்டலேறு அணையில் வினாடிக்கு 2,450 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 429 கனஅடி தண்ணீர் மட்டும் வந்து சேருகிறது. மீதம் உள்ள 2,021 கனஅடி தண்ணீர் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வார இறுதியில் நெல் அறுவடை தொடங்க உள்ளதால் அங்குள்ள விவசாயிகளுக்கு மதகுகளின் வழியாக தண்ணீர் திறப்பு தேவை இருக்காது.
இதனால் அந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து விடும். மேலும் அங்குள்ள விவசாயிகள் மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் திருடுவதை அதிகாரிகள் தடுத்து வருகிறார்கள்.
மேலும் 4 நாட்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பதி சென்று ஆந்திர அரசின் தெலுங்கு கங்கை திட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கண்டலேறு அணையில் இருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு ஒப்புக்கொண்டது.
ஆகையால் பூண்டி ஏரிக்கு இன்னும் ஓரிரு நாட்களில் கிருஷ்ணா நதிநீர் கூடுதலாக வந்து சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி கூடுதல் தண்ணீர் வந்து சேர்ந்தால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 28.75 அடியாகவும், தண்ணீர் இருப்பு 1,467 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
கடந்த மாதம் 2-ந் தேதி நீர் மட்டம் 26.07 அடியாகவும், தண்ணீர் இருப்பு 1,012 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. கடந்த 35 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 893 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப் பிடத்தக்கதாகும்.

Related Tags :
Next Story