ஊத்துக்கோட்டை அருகே கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை கால்வாயில் மதகுகள் அமைக்கும் பணி தீவிரம்
கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை கால்வாயில் மதகுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர் தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இதுதவிர ஆரணி, கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.
ஆயினும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடியில் பிரமாண்ட அணை கட்டப்படும் என்று அறிவித்தார்.
அதன்பேரில் 1,485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை ஜங்காலபள்ளியில் தடுப்பு மதகு அமைத்து கண்ணன்கோட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்ல உள்ளனர்.
அதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீரையும் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.
இதற்காக ஜங்காலபள்ளியில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கும் பணி மற்றும் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் அணைக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.
ஜங்காலபள்ளியில் இருந்து கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை வரை 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு செல்ல கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த 12 கிலோ மீட்டர் தூரத்தில் 5 பகுதிகளில் பாலம், 5 பகுதிகளில் மதகுகள் அமைக்க உள்ளனர்.
கால்வாய் நெடுகிலும் உள்ள கிராம பொது மக்கள் வந்து செல்ல ஏதுவாகவும், மழை காலத்தில் அருகே உள்ள காட்டு பகுதியிலிருந்து பாயும் தண்ணீர் வயல்வெளிகளுக்கு செல்லும் விதத்திலும் பாலங்கள், மதகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு அங்கமாக ஜங்காலபள்ளி அருகே உள்ள சீனிகுப்பத்தில் கால்வாய் மீது மதகுகள் அமைக்கும் பணிகள் கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சிலம்பரசன், சதீஷ் ஆகியோரின் மேற்பார்வையில் இரவு-பகலாக நடைபெற்று வருகின்றன. பாலம் மற்றும் மதகுகள் அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சதீஷ் தெரிவித்தார்.
இந்த பணிகள் மற்றும் அணை அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் 1.50 டி.எம்.சி. தண்ணீர் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கலாம். இப்படி சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது அணையில் இருந்து ராட்சத எந்திரங்கள் மூலம் உறிஞ்சி குழாய்கள் வழியாக பூண்டி ஏரிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.

Related Tags :
Next Story