காஞ்சீபுரத்தில் ‘நீட்’ தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டணி சார்பில், காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சீபுரம்,
‘நீட்’ நுழைவுத்தேர்வை கண்டித்து ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டணி சார்பில், காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட திராவிட கழக தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் முன்னிலை வகித்தார். விழாவில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜீ.வீ.மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், காஞ்சீபுரம் நகர செயலாளர் கே.ஆறுமுகம் உள்பட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story