கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை விலைக்கு வாங்கி திராட்சையை காப்பாற்றும் விவசாயிகள்
ஆண்டிப்பட்டி பகுதியில், கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை விலைக்கு வாங்கி திராட்சை பயிரை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர்.
தேனி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேவா நிலையம், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை ஆகிய கிராமங்களில் பன்னீர் திராட்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திராட்சை கொடிகளுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் திராட்சை கொடிகள் கருகி வருகின்றன. வெளி இடங்களில் இருந்து டேங்கர்கள் மூலம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி திராட்சையை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து தோட்டங்களுக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் சொட்டு நீர் பாசனம் மூலம் திராட்சைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு உரம், மருந்து, கூலி உள்பட ரூ.2 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.
இந்தசூழ்நிலையில் விலை கொடுத்து தண்ணீரும் வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ பன்னீர் திராட்சை ரூ.25–க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. மேலும் திராட்சை கொடிகளில் செவ்வட்டை நோய் தாக்குதல் இருப்பதால் விளைச்சல் குறைந்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு 1½ டன் விளையக்கூடிய திராட்சை பழங்கள், தற்போது ஒரு டன் மட்டுமே கிடைக்கிறது. இதனால் திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வருடத்தில் 6 மாதங்களுக்கு மட்டுமே ஒயின் தொழிற்சாலைக்கு திராட்சை கொள்முதல் செய்கின்றனர். அதுவும் விவசாயிகளே, தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் விவசாய நிலங்களுக்கு வந்து நேரடியாக கொள்முதல் செய்தால் ஓரளவுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Related Tags :
Next Story