ராமேசுவரம்–கோவை இடையே பயணிகள் ரெயில்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ராமேசுவரம்–கோவை இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திண்டுக்கல்
தமிழகத்தில் தற்போது அரசு, தனியார் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கட்டணம் இருமடங்காக உயர்ந்ததால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் பல மடங்கு குறைவு என்பதால் தமிழகம் முழுவதும் தற்போது ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
அருகில் உள்ள நகரங்களுக்கு தினசரி பஸ்களில் பயணித்து வந்தவர்கள் கூட தற்போது ரெயிலில் பயணிக்க தொடங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக சீசன் டிக்கெட் முறையும் இருப்பதால் பெரும்பாலானோர் தற்போது பஸ் பயணத்தை தவிர்க்க தொடங்கி உள்ளனர். ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து ரெயில்வே நிர்வாகமும் சிறப்பு, கூடுதல் ரெயில்களை இயக்க தொடங்கி உள்ளது.
மேலும் ஒரு குறிப்பிட்ட ஊர்களுக்கு இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்படும் ரெயில்களை கூடுதலாக சில ஊர்களுக்கு சென்று வரும் வகையில் நீட்டிப்பு செய்துள்ளது. அந்த வகையில் மதுரையில் இருந்து பழனிக்கு தினசரி காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் தற்போது கோவை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் அந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு பழனி வழியாக மதுரைக்கு இரவு 8 மணிக்கு சென்றடைகிறது.
இது தவிர பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கும், சென்னைக்கும் தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்கள், முதலில் ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு வந்து பின்னர் பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் பழனி செல்லும் ரெயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு தினசரி ரெயில் இயக்கினால் பழனிக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி கேரள பக்தர்களும் பயன் அடைவார்கள்.
ரெயில்வே அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். புதிதாக ரெயில்கள் இயக்காவிட்டாலும், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வரை வரும் ரெயிலையாவது கோவை வரை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story