குக்கரால் தாக்கி டியூசன் ஆசிரியை கொலை பக்கத்து வீட்டு வாலிபர் கைது
டோம்பிவிலியில் குக்கரால் தாக்கி டியூசன் ஆசிரியை கொலை செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தானே,
தானே மாவட்டம் டோம்பிவிலி மேற்கு பகுதியில் உள்ள ஓம் பரசுராம் என்ற குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர் மனிஷா (வயது60). டியூசன் ஆசிரியை. இவர் கடந்த 18 வருடமாக தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை மனிஷா வீட்டு சமையலறைக்குள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது.
தகவல் அறிந்த விஷ்ணுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனிஷாவின் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது உடல் அருகே ரத்தக்கறை படிந்த குக்கர் மற்றும் கத்தி கிடந்தது.
இதன் மூலம் அவர் குக்கரால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரோகித் லட்சுமண் என்ற வாலிபர் தான் மனிஷாவை கொலை செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், சம்பவத்திற்கு முன் மனிஷாவுக்கும், ரோகித் லட்சுமணின் தாய்க்கும் ஏதோ பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது, மனிஷா தனது தாயை திட்டியதை அறிந்து கோபத்தில் அவரை ரோகித் லட்சுமண் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story