பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்தில் 2,474 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய பெண்களிடமிருந்து 2,474 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூர்,
பணிபுரியும் மகளிர் தங்களது போக்குவரத்தினை எளிதில் மேற்கொண்டு, அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு சிரமமின்றி செல்வதற்காக இருசக்கர வாகனம் வாங்க 50 சதவித மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், இருசக்கர வாகனம் மானிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 5-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்க நேற்று கூட்டம் அலைமோதியபடி இருந்தது.
பெண்கள் பலர் கடைசி நாளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் நின்று அந்த அலுவலகங்களில் கொடுத்து சென்றதை காணமுடிந்தது. சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து ஆர்வத்துடன் விண்ணப்பித்து சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்திற்கு 2,474 பேர் விண்ணப்பித்துள்ளதாக மகளிர் திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது தெரிவித்தார். இந்த மானிய திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 810 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓட்டுனர் பயிற்சி உரிமம் (லேனர்) நகல் மற்றும் பணிபுரிவதற்கான சான்றிதழ், வருமான சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஓட்டுனர் உரிமம் இல்லாத பெண்கள், முதல் கட்டமாக ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற ஆர்வம் காட்டினர். அந்த வகையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெரம்பலூர் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெற விண்ணப்பித்த பெண்களில் தகுதியுடைய 2,251 பேருக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 325 பெண்களுக்கு ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது என வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெரம்பலூர் நகராட்சியில் 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 172 விண்ணப்பங்களும், இறுதிநாளான நேற்று மட்டும் 366 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 538 பெண்கள் மானிய உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பங்களை தேர்வுக்குழுவினர் இம்மாதம் 15-ந்தேதி ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் தெரிவித்தார். மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்திற்காக 5,032 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் உரிய ஆவணங்களுடன் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட 2,474 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கிராமப்புறங்களிலிருந்து 1,697 பெண்களும், நகர்புறத்தில் 777 பெண்களும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களை அளித்திருக்கின்றனர்.

Related Tags :
Next Story