விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி எரிப்பு; வாலிபர் தீக்குளிக்க முயற்சி
ஊத்தங்கரை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி எரிக்கப்பட்டதை கண்டித்து வாலிபர் தீக்குளிக்க முயன்றார். மேலும் அங்கு சாலை மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், மகனூர்பட்டி, கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள், கட்சியின் பெயர் பலகையில் உள்ள அம்பேத்கர் படத்தின் மீது ஆயில் ஊற்றி சிலர் தீவைத்து எரித்தனர்.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை கொண்டம்பட்டி அருகே உள்ள பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அன்பரசன்(30) என்ற வாலிபர் திடீரென தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அதை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ஜூனன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கனியமுதன் ஊத்தங்கரைக்கு சென்றார். பின்னர் அவர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார்.

Related Tags :
Next Story