மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்டதால் தொழிலாளி அடித்துக்கொலை 4 பேர் கைது
மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்டதால் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடியூரை சேர்ந்தவர் பீமன் என்கிற பெருமாள் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 20 நாளில் மனைவி, பீமனை பிரிந்து சென்று விட்டார். இதனால் பீமன் தனது தாயார் சுந்தரத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் திருமல்வாடியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருவதால் தனது 9 வயது மகளை கோடியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இந்த சிறுமி உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த மாணவியிடம், பீமன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூருவில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாணவியின் தந்தை சக்திவேல் தனது தம்பி முருகன், நண்பர்கள் அருண், கமலேசன் ஆகியோருடன் கோடியூருக்கு வந்தார். அவர்கள் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக பீமனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை பீமன் அங்குள்ள பள்ளி மைதானத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பீமனை சக்திவேல் உள்ளிட்ட 4 பேரும், அழைத்து சென்று அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், பீமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் (34), அவருடைய தம்பி முருகன் (30), நண்பர்கள் அருண் (28), கமலேசன் (34) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக தகவல் கூறப்பட்டதால் மது போதையில் ஆத்திரமடைந்து அவர்கள் 4 பேரும் பீமனை அடித்துக்கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story