அமைச்சர் விழாவுக்கு திடீரென வந்த தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.வால் பரபரப்பு
தூத்துக்குடியில் அமைச்சர் பங்கேற்ற விழாவுக்கு திடீரென தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனது தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு அழைக்காமல் தன்னை புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 25 வார்டுகளில் ரூ.11 கோடி மதிப்பில் தார்சாலை, பேவர்பிளாக் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்கான தொடக்க விழா தூத்துக்குடி கணேஷ்நகரில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது, தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ கீதாஜீவன் (தி.மு.க.) திடீரென அங்கு வந்தார். அவர், தொகுதி எம்.எல்.ஏ.க்கு தகவல் தெரிவிக்காமல் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடப்பதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அமைச்சருடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. கூறும்போது, தூத்துக்குடி தொகுதியில் அரசு விழாக்கள் நடக்கும்போது, தொகுதி எம்.எல்.ஏ.வான எனக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. இன்று (அதாவது நேற்று) கணேசன் காலனி பகுதியில் சாலை பணிகள் தொடக்க விழா நடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி ஆணையாளரை தொடர்புகொண்ட போது, அமைச்சர் ஆய்வு செய்ய வருவதாக தெரிவித்தார். இதனால் நான் அங்கு சென்றபோது, சாலை பணிகள் தொடக்க விழா நடந்தது. இதனால் தொகுதி எம்.எல்.ஏ.வை எப்படி புறக்கணிக்கலாம்? என்று கேட்டேன். இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்காமல் முறையாக தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் அந்த பகுதி மக்கள் அனாதையாக இருக்கிறார்கள். அந்த தொகுதிகளில் அமைச்சர் அதிகம் சுற்றுப்பயணம் செய்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று கூறினார்.

Related Tags :
Next Story