காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
மேலத்தட்டப்பாறை பகுதியில் காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், என கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
கருங்குளம் கிராம மக்கள் நலக்குழு சார்பில், அதன் செயலாளர் உடையார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2013-14-ம் ஆண்டு 239 பசுமை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதே போன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளுக்கு சூரிய மின்சக்தி கருவி(சோலார்) பொருத்தி இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் வீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த வீடுகளுக்கு இதுவரை சோலார் கருவி பொருத்தப்படாமல் மோசடி நடந்து உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
மேலத்தட்டப்பாறை கிராம மக்கள் கொடுத்த மனுவில், மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை பகுதிகளில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் சாலைகள், ஓடைகளிலும், தனியார் நிலங்களிலும் அத்துமீறி மின்கம்பங்களை நட்டி வருகின்றனர். பணியை தடுத்தால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். ஆகையால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலைஉருவாகி உள்ளது. ஆகையால் அனுமதி பெறாமல் நடைபெறும் காற்றாலை பணிகளை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன் மற்றும் கீழத்தட்டப்பாறையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கீழதட்டப்பாறையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவன் மீதும், அவனுடைய உறவினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
மாவட்ட ம.தி.மு.க.வினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மினிபஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில், அதிகாரிகளை பாராட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் முருகபூபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது, மனுவை கிழித்து குப்பை தொட்டியில் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மகராஜன், சுந்தர்ராஜன், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், திருச்செந்தூர் ரோட்டில் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்தகடையால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அந்த கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் கடையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. அந்த டாஸ்மாக் கடை திறப்பதை கைவிட வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
அ.குமரெட்டையாபுரம் பகுதி மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையால் பல்வேறு மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் அ.குமரெட்டையாபுரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க கூடாது’ என்று கூறி உள்ளனர்.
வேம்பார் வட்டார விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், வேம்பார் கிராமத்தில் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில்உள்ளது. எங்கள் பகுதியில் மீன்பிடி இறங்கும் தளம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை சிலர் செயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர். ஆகையால் உடனடியாக கட்டுமான பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
கடம்பூர் அருகே உள்ள ஓம்நமாக்குளம் கிராம மக்கள் மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் அய்யலுசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு முகத்தை வெள்ளைத்துணியால் மூடியும், கோரிக்கை அட்டையை ஏந்தியும் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், கடம்பூர் அருகே உள்ள ஓம்நமாக்குளம் கிராமத்தில் உள்ள ஊரணியில் இருந்து தனியார் காற்றாலைக்கு எந்தவித அனுமதியும் இன்றி சரள் மண் அள்ளப்பட்டு வருகிறது. ஆகையால் மண் அள்ளுபவர்கள் மீதும், இதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story