சுனாமியை கண்டுபிடிக்க புதுநுட்பம்
கடலில் ஏற்படும் நீரலைகளை வைத்து சுனாமியை கணக்கிடும் புதிய நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
சுனாமி, 2004-ம் வருடத்தை அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெறச் செய்துவிட்டது. அதன் துயரங்கள், பொதுமக்களைப்போலவே உலக நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியது. அதுபோன்ற பேரழிவை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையாக இருக்க பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கத் தூண்டியது. தற்போது பல்வேறு நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை மையங்கள் துரிதமாக செயல்படத் தொடங்கி விட்டன. பெரிய நிலநடுக் கங்கள் ஏற்பட்டாலே சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப் படுகிறது.
சுனாமியை கடலில் ஏற்படும் நீரலைகளை வைத்து கணக்கிடும் புதிய நுட்பத்தை காடிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். “நிலநடுங்கங்கள் புவிப்பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதுபோல கடலில் ஒலி ஈர்ப்பு அலைகளை கடத்துகின்றன. இந்த அலைகள் சுனாமிப் பேரலைகளைவிட 10 மடங்கு வேகமாக கடல் நீரில் பயணிக்கின்றன. எனவே இதன் அடிப்படையில் நீரலைகளை கண்காணித்து சுனாமி அறிவிப்புகளை வெளியிட முடியும்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கான எளிமையான சாதனத்தை உருவாக்கும் முயற்சியிலும் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Related Tags :
Next Story