வார்டு மறுவரையறை தொடர்பாக 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடியில், நாளை நடக்கிறது
வார்டு மறுவரையறை தொடர்பாக 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நாளை(வியாழக்கிழமை) தூத்துக்குடியில் நடக்கிறது.
தூத்துக்குடி,

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
கருத்து கேட்பு கூட்டம்
ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெளியிடப்பட்ட வார்டு மறுவரையறை வரைவு கருத்துருக்கள் மீது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீதான 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் நாளை(வியாழக்கிழமை) தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்படுகிறது.
நாளை காலை 10–30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்துக்கும், 11–30 மணிக்கு விருதுநகர் மாவட்டத்துக்கும், மதியம் 2 மணிக்கு நெல்லை மாவட்டத்துக்கும், மாலை 3–30 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த ஆட்சேபனை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
கருத்துக்களை தெரிவிக்கலாம்
இந்த கூட்டத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே எழுத்து மூலமாக கடந்த 12.1.2018 வரை மனுக்கள் அளித்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் புதிய ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்த மனுக்கள் ஏதும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story