குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Feb 2018 2:30 AM IST (Updated: 6 Feb 2018 6:52 PM IST)
t-max-icont-min-icon

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நேற்று திருமால் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை,

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நேற்று திருமால் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமால் பூஜை


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருமால் பூஜை விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருமால் பூஜை கோவிலில் நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நித்யகால பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மாலை சாத்துதல் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கற்பூர தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாராயணர் வீதி உலா

பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில், அன்னதானம் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நாராயணர் பெரிய சப்பரத்தில் எழுந்தருளி, குரங்கணி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார்கள் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னைவாழ் குரங்கணி நாடார்கள், கோவை வாழ் குரங்கணி நாடார்கள், தூத்துக்குடி வாழ் குரங்கணி நாடார்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story