8–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆத்தூர் அருகே பாட்டி கண்டித்ததால்
ஆத்தூர் அருகே, பாட்டி கண்டித்ததால் மனமுடைந்த 8–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
ஆறுமுகநேரி,
ஆத்தூர் அருகே, பாட்டி கண்டித்ததால் மனமுடைந்த 8–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
8–ம் வகுப்பு மாணவி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி புதுமனை நகரை சேர்ந்தவர் வள்ளிகுமார். இவருடைய மனைவி மாலையம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள். இவர்களில் 2–வது மகள் பெயர் சுஹாசினி (வயது 13).
மாலையம்மாள், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், ரதி என்பவரை வள்ளிகுமார் 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது வள்ளிகுமார் 2–வது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். சுஹாசினி மட்டும் முக்காணியில் உள்ள பாட்டி சக்திக்கனி வீட்டில் தங்கி இருந்து, அங்குள்ள தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தாள்.
பாட்டி கண்டிப்பு
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சுஹாசினி, தனது தெருவில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த அவருடைய பாட்டி சக்திக்கனி, வயதுக்கு வந்த பெண் வெளியில் வந்து விளையாடக்கூடாது என்று கண்டித்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த சுஹாசினி, வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டாள். வெகுநேரம் ஆகியும் அவள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த, பாட்டி மற்றும் அந்த பகுதி மக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாட்டியின் சேலையால் தூக்குப்போட்டு சுஹாசினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story