பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்: தனியார் நிறுவன அதிகாரி பலி சங்கரன்கோவில் அருகே பரிதாபம்


பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்: தனியார் நிறுவன அதிகாரி பலி சங்கரன்கோவில் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 7 Feb 2018 2:30 AM IST (Updated: 6 Feb 2018 8:59 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பஸ்– மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே பஸ்– மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

பஸ்– மோட்டார்சைக்கிள் மோதல்

நெல்லை வண்ணார்பேட்டை அப்பர் சன்னதி தெருவை சேர்ந்தவர் சேது. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). இவர் தனியார் பால் நிறுவனத்தில் உதவி விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை ராஜபாளையம் செல்வதற்காக மணிகண்டன் தனது  மோட்டார் சைக்கிளில் நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். சங்கரன்கோவில்   அருகே உள்ள நெடுங்குளம் விலக்கு பகுதியில் வந்த போது       எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் திடீரென மோதிக்கொண்டன.

பரிதாப சாவு

இதில் மணிகண்டன் வலது கை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தார். பஸ்சின் வலது பக்கம் பலத்த சேதமானதுடன், வலதுபுறமுள்ள முன்பக்க டயரும் வெடித்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மணிகண்டன் உடலை மீட்ட போலீசார் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் கடையநல்லு£ர் அருகே உள்ள சங்கனேரியை சேர்ந்த கதிர்செல்வன் (45) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story