உள்ளாட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடியில் நாளை நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்துகேட்பு கூட்டம் தூத்துக்குடியில் வருகிற 8–ந் தேதி நடக்கிறது.
நெல்லை,

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கருத்துகேட்பு கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவறையறை குறித்த தகவல் கடந்த 27–12–2017 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரையறைகள் குறித்து கருத்து தெரிவிக்கக்கூடிய பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் ஆட்சேபனை மற்றும் கருத்துகள் குறித்து பொதுமக்கள் கடந்த 12–ந்தேதி வரை மனுக்கள் அளித்தனர்.
நாளை நடக்கிறது
இந்த மனுக்கள் கொடுத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் நாளை (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம்.
இதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை குறித்த மறுவரையறைக்கு மனு கொடுத்த பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story