லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதி பணி இடை நீக்கம் - கவர்னர் உத்தரவு
லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதியை பணி இடை நீக்கம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி (வயது 67). இவர் கடந்த 3-ந் தேதி தனது வீட்டில் பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
துணைவேந்தருக்கு இடைத்தரகராக செயல்பட்ட தொலைதூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
இந்த நிலையில் கணபதியை பணி இடை நீக்கம் செய்து கவர்னர் பன்வாரிலால்,புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
துணைவேந்தர் கணபதி உயர் கல்வித்துறை செயலாளரின் தடையையும் மீறி கடந்த 2016-ம் ஆண்டில் பணியிடங்களை நிரப்பி உள்ளார். இந்த பணியிடங்களுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து 2016-ம் ஆண்டு துணைவேந்தர் கணபதியால் நிரப்பப்பட்ட அனைத்து பேராசிரியர் பணியிடங்களின் தகுதிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்பிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 82 பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
துணைவேந்தர் கணபதி மீது அடுக்கடுக்கான லஞ்ச புகார்கள் வெளியானதையொட்டி அரசு உத்தரவின்பேரில் கடந்த 6 மாதத்திற்கு முன்பே ரகசிய விசாரணையில் இறங்கினோம். 2016-ம் ஆண்டு பணி நியமனத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது புகார் கொடுத்திருக்கும் பேராசிரியர் சுரேஷ் பி.எச்.டி. முதுகலை படிப்பு முடித்திருக்கிறார். தென் கொரியாவில் ஆராய்ச்சி நிறுவனத்தில் சில காலம் பணியாற்றி உள்ளார். பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் கல்வி நிறுவனங்களில் 6 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் இவர் பணிக்கு தேர்வாகி கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் இவர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதற்காக தான் சுரேஷிடம் ரூ.40 லட்சம் பேரம் பேசி உள்ளனர். இதில் துணைவேந்தருக்கு பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் ஆகியோர் இடைத்தரகர்களாக பேசி பணத்தை கேட்டு அடிக்கடி போனில் பேசி தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் வெறுப்படைந்து சுரேஷ் புகார் செய்துள்ளார். இவருக்கு உதவிபேராசிரியர் பணி நியமனத்துக்கான தகுதிகள் சரியாக உள்ளன. ஆனால் பல நியமனங்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இது குறித்த புகார்களின் பேரில் பணியில் சேர்ந்த பேராசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.
அப்போது அவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். இதுதவிர துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், தொலைதூர கல்வி மைய அதிகாரிகள் என பலர் மீது புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
பேராசிரியர் பணியிடங்கள் தவிர பல்கலைக்கழகத்தில் துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என கடந்த 2 வருடங்களில் மட்டும் 250 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு விசாரணையும் முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதை பயன்படுத்தி துணைவேந்தர் கணபதி, பணிக்கு சேர்க்கப்பட்டவர்களில் சுமார் 60 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் (ஆர்.டி.ஜி.எஸ். முறையில்) துணைவேந்தருக்கு நெருக்கமானவர்ளின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்து லஞ்ச பணத்தை பெற்றிருப்பதும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதுதவிர மேலும் 22 பேராசிரியர்களிடம் பணம் வாங்கியது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இதுதொடர்பான வங்கி ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து உள்ளனர். இவற்றை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்க உள்ளனர்.
இதற்கிடையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் புகார் மனு வெளியிட்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் முறைகேடுகள் எப்படி நடைபெற்றது? என்று தெரிவித்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முழுநேர பாடத்திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற மாணவர்கள் இருந்த போதிலும் தொலைதூரக் கல்வித்திட்டத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும், முனைவர் பட்டம் வழங்கி பகுதிநேர படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் பதவி வழங்கி உள்ளனர். இதன்மூலம் யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானிய குழு), டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்), உயர்கல்வித்துறை அரசாணை, இடஒதுக்கீடு மற்றும் பணி நியமன சுழற்சி முறை முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது.
மேலும், ஒரே பணியிடத்துக்கு 2 பேருக்கு பணி ஆணை வழங்கி உள்ளனர். பெண்களுக்கு மட்டுமே என்ற இட ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டு ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட அனைத்து பணி நியமனங்களும் செல்லாது என அறிவிக்க வேண்டும். துணைவேந்தர் மீதும், அவருடன் ஊழலுக்கு துணைபோன பேராசிரியை, 3 பேராசிரியர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சேந்த 3 பேர் உள்பட மொத்தம் 7 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தான் புதிய நியமனங்களுக்கு லஞ்சபணத்தை பெற்று கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்கள் முன்பே அரசு, கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது இந்த புகாரின் பேரில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. தற்போது இந்த புகாரில் கூறப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைதூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே புகாரில் குறிப்பிட்டுள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 7 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story