ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்


ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:45 AM IST (Updated: 7 Feb 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்கள் பணி நியமனம் செய்தது தொடர்பாக நடை பெற்ற ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று வேலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வேலூர்,

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக் குழு கூட்டம் சத்துவாச் சாரி அலமேலு மங்கா புரத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துக் கொள்ள வந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடையப்போகிறது. சுமார் ஓராண்டாக நடைபெறும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழலை தவிர எதுவும் இல்லை. தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை இழந்ததுதான் ஓராண்டில் நடந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுவே எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டின் சாதனை. ஓராண்டு ஆட்சியில் தமிழகம் ஒரு நூற்றாண்டு பின் தங்கி உள்ளது. இந்த ஓராண்டில் பல செயல்களை செய்து இருக்கலாம். ஆனால், ஊழல் மட்டுமே உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

முதல்-அமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று தெரியவில்லை. எனவே ஊழல் செய்து பணத்தை ஈட்டுகிறார்கள். குட்கா, சத்துணவு பணியாளர்கள் நியமனம் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமனம், ஆற்று மணலில் ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்திலும் ஊழல் நடந்துள்ளது. 25 வகையான ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஊதியத்தை 100 மடங்கு உயர்த்தி கொண்டார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் நலன் மீது அக்கறை இல்லை. ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு படுமோசமாக உள்ளது. கள்ளத்துப்பாக்கி விற்கும் மாநிலமாகவும், சந்தையாகவும் தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதை பொருட்கள் தலை விரித்தாடுகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தான் போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இது காவல்துறையினருக்கும் தெரியும். ஆனால் இதனை அவர்கள் கண்டும் காணாமலும் உள்ளனர்.

தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முன்பு மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார்கள். தற்போது ‘நீட்’ முறையால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு ‘நீட்’ போன்ற நுழைவு தேர்வுகள் ‘நுழையா‘ தேர்வுகளாக மாறிவிட்ட அவலம் காணப்படுகிறது.

மக்களின் பிரச்சினைகள் குறித்து தட்டி, எதிர்த்து கேட்க வேண்டிய எதிர்க்கட்சியான தி.மு.க. தூங்கி கொண்டிருக்கிறது. பா.ம.க. தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தட்டி கேட்கிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதை அடுத்து ஊழல் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. துணைவேந்தருக்கு பணம் வாங்கி கொடுக்க 20 பேராசிரியர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். துணைவேந்தர் 64 பேராசிரியர்களை பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்துள்ளார். அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். பேராசிரியர்களை தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும். தேர்வுக்குழுவுக்கே பணம் கொடுத்துவிட்டு துணைவேந்தர் கணபதி தனக்கு வேண்டியவர்களை பணி நியமனம் செய்துள்ளார். எனவே, துணைவேந்தர் கணபதிக்கு உடந்தையாக இருந்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பணி நியமனம் செய்தது தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும் இதற்கு முன்பு இருந்த துணைவேந்தர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக விசாரிக்க மதுரை மற்றும் சென்னையில் தனி கோர்ட்டு அமைத்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

துணைவேந்தர் கணபதி, முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தற் போ தைய கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு பணம் கொடுத்தாக கூறப் படுகிறது. அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டியில், பல் கலைக்கழக துணை வேந்தரை தமிழக கவர்னர் தான் நிய மிப்பார். துணைவேந்தர் நிய மனத்துக்கும், கல்வித் துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி உள்ளார். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு கவர்னர் தான் பொறுப்பு என்ற தோற்றத்தை அமைச்சர் ஏற்படுத்த முயன்றுள்ளார். அமைச்சரின் இப்பேச்சு கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக பணி நியமன ஊழல்கள் குறித்து தெளிவுபடுத்த கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும். அதுசம்பந்தமாக விசாரிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மணல் குவாரிகள் மூலம் ஆண்டிற்கு ரூ.35 ஆயிரம் கோடி கையூட்டு வருகிறது. எனவே தான் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு தொடர்பாக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று இடைக்கால தடை பெற்றுள்ளது.

இருசக்கர வாகன மானிய திட்டத்திலும் அ.தி.மு.க.வினர் இடைத்தரகராக செயல்பட்டு இருசக்கர வாகனம் பெற மானியம் பெற்று தருவதாக கூறி ஒவ்வொரு பயனாளி களிடமும் ரூ.10 ஆயிரம் பணம் பெற்று வருகிறார்கள்.

அனைத்து மாணவர் களுக்கும் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசுப்பணிகளில் தமிழர்கள் மட்டுமே சேர்க்கும்படியாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இதே போன்று தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். வேலூரில் நெல் கொள்முதல் விற்பனை மையத்தை அதிகளவு திறக்க வேண்டும்.

கரும்பு கொள்முதல் விலை யை அறிவிக்க வேண்டும். ரூ.1,700 கோடி நிலுவை தொகையை கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க வேண்டும். திருப் பத்தூரில் தலைமை ஆசிரி யரை பள்ளி மாணவனே கத்தியால் குத்தியுள்ளான். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாணவர் களுக்கு நீதி போத னைகள் அளிக்க வேண்டும். கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, துணைத் தலைவர்கள் இளவழகன், சி.கே.ரமேஷ், மாநில துணை பொதுச் செயலாளர் முரளி, முன்னாள் மத்திய அமைச்சர் கள் வேலு, என்.டி. சண்முகம், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ஜி.கே.ரவி, மாநில துணை அமைப்பு செயலாளர் கே.வெங்கடேசன், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் ஜி.சுரேஷ்குமார், மாநில இளைஞர் சங்க துணைசெயலாளர் என்.குமார், மாவட்ட துணை செயலாளர் ஆர்.பாலாஜி, குடியாத்தம் நகர செயலாளர் சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story