பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் 2-வது நாளாக நீடிப்பு


பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் 2-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2018 3:45 AM IST (Updated: 7 Feb 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் நிரந்தர வாரிசு வேலை வழங்கக்கோரி போராடி வந்த 200 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் நிரந்தர வாரிசு வேலை வழங்கக்கோரி போராடி வந்த 200 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதத்தில் 16 நாள் என்று வவுச்சர் அடிப்படையில் வேலை வழங்கப்பட் டது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இரவு நேரத்திலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. ஆனால் ஒரு நாள் போராட்டத்துக்கு மட்டுமே அவர்கள் அனுமதிபெற்ற நிலையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இரவிலும் அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story