கேரளாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்: உசிலம்பட்டியில் ஒரே நாளில் 13¾ கிலோ கஞ்சா பறிமுதல்
உசிலம்பட்டியில் ஒரே நாளில் 13¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் ஒரே நாளில் 13¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள குறுக்கம்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பிரிவு போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே கணவாய் கேட்டில் உள்ள ஒரு டீக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் குறுக்கம்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பு என்பவரது மகன் ரமேஷ் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து 4¾ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் இந்த கஞ்சா விற்பனையில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரமேசை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த பரமன் என்பவரது மனைவி வீரம்மாள் (வயது 35) கஞ்சா விற்பதாக உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து வீரம்மாளின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். இதில் அங்கு 6 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வீரம்மாளை கைது செய்து 6 கிலோ சஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போல் உசிலம்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளாவைச் சேர்ந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் காரில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சராபூதின் (54), நஷீப்(46) ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், கீரிப்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் அவர்களுக்கு கஞ்சா வாங்கிக்கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கார் மற்றும் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் நேற்று ஒரே நாளில் 13¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப் பகுதியில் கஞ்சா விற்பனை என்பது பாரம்பரிய தொழில் போல் அமோகமாக நடைபெற்று வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்களை பிடித்து கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இளைஞர்களை சீரழிக்கும் இது போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Tags :
Next Story