சாராயம் கடத்திய 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


சாராயம் கடத்திய 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Feb 2018 3:45 AM IST (Updated: 7 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்தப்படுவதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் ஆலங்குடிச்சேரி - மரைக்கான்சாவடி பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருக்கண்ணங்குடி காலனி தெருவை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் விக்னேஷ் (வயது24), ஓர்குடி கீழத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன் (27) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார், 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story