வார்டு வரையறை பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி தபால் அனுப்பும் போராட்டம்

திருவாரூரில் வார்டு வரையறை பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடை பெற்றது.
திருவாரூர்,
திருவாரூரின் மைய பகுதியில் உள்ள தென்றல் நகரை வார்்டு எண் 1-ல் இணைத்திட வேண்டும். ஆனால் உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை பட்டியலில் தென்றல் நகரில் இருந்து தொலைவில் எந்தவித தொடர்்பு இல்லாத பாலாஜி நகர்், நல்லப்பா நகர், காமாட்சியம்மன் கோவில் தெரு பகுதிகளடங்கிய வார்டு எண் 7-ல் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கும், உள்ளாட்சி நிர்வாக நடைமுறையில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே அருகருகே உள்ள நகர்களை ஒரே வார்டில் இணைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர் நலப்பணி சங்கம் மூலம் வார்டு வரையறை பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், திருவாரூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.
மேலும் திருச்சியில் மாநில வரையறை ஆணையரிடம் நேரடியாக எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை திருவாரூர் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து தென்றல் நகர் பகுதியை வார்டில் 1-ல் இணைக்க கோரியும், வார்டு வரையறை பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தியும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நகர் பகுதி குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரெங்கராஜுலு முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு தபால் அனுப்பும் போராட்டத்தினை தொடங்கி வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடு்க்காவிட்டால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

Related Tags :
Next Story