சாராய வியாபாரி முதல் மனைவி கொலை முயற்சி வழக்கு: பெண் தாதா எழிலரசி விடுதலை
சாராய வியாபாரி முதல் மனைவி கொலை முயற்சி வழக்கில் பெண் தாதா எழிலரசி விடுதலை செய்யப்பட்டார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினத்தை சேர்ந்த சாராய வியாபாரி ராமு. இவர் முதல் மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எழிலரசியை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தார். இதன் காரணமாக ராமுவுக்கும், வினோதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 7.8.2011 அன்று இரவு வினோதா தனது தங்கை, குழந்தைகள், நண்பர் வைத்தி, உறவினர் பாலமுருகன் ஆகியோருடன் காரைக்கால் கடற்கரைக்கு வந்திருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் வினோதாவை சரமாரியாக தாக்கிவிட்டு காரில் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக வினோதா கொடுத்த புகாரின்பேரில் ராமு, எழிலரசி, விக்ரமன் உள்பட 7 பேர் மீது காரைக்கால் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு, விசாரணையில் இருந்தபோது கடந்த 11.1.2013 அன்று கூலிப்படையினரால் ராமு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக வினோதா கொலை செய்யப்பட்டார். எனவே வினோதா கொலை முயற்சி இந்த வழக்கில் இருந்து ராமு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீதமுள்ள 6 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. எழிலரசி, விக்ரமன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். எனவே அவர்களை தவிர்த்து, மற்ற 4 பேரை 25.7.2016 அன்று கோர்ட்டு விடுதலை செய்தது.
இந்த நிலையில் கடந்த 3.1.2017 அன்று முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக் குமார் கொலை வழக்கில் எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு வினோதா மீதான கொலை முயற்சி வழக்கில் எழிலரசி காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதற்காக புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருந்து பெண் தாதா எழிலரசி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 11 மணியளவில் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். நீதிபதி சிவகடாட்சம் தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது புகார்தாரர் வினோதா இறந்துவிட்டதாலும், எழிலரசி மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படாததாலும் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பு கூறினார்.
அதைத் தொடர்ந்து எழிலரசி மீண்டும் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த மற்றொரு முக்கிய குற்றவாளியான விக்ரமன், கடந்த சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் சதித்திட்ட ஆலோசனையில் ஈடுபட்டபோது புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது வி.எம்.சி.சிவக் குமார் கொலை வழக்கு தொடர்பாக நிரவி போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் வினோதா மீதான கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விக்ரமனிடம் விசாரணை நடைபெற உள்ளதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :
Next Story