பாகிஸ்தான் சதிவேலையா? கவர்னர் கிரண்பெடியின் டுவிட்டர் பக்கம் முடக்கம்
புதுவை கவர்னர் கிரண்பெடியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் சதிவேலையா? என்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னராக கிரண்பெடி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் சமூக வலைதளங்களான டுவிட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் தனது சுற்றுபயண விவரங்கள், அரசு நிகழ்ச்சிகள், தனது அறிக்கைகள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தான் ஆற்றும் உரைகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்.
கடந்த ஓராண்டாக டுவிட்டர், வாட்ஸ் அப் மூலம் அரசியல் ரீதியான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும்போது உடனடியாக டுவிட்டர், வாட்ஸ் அப் மூலம் பதில் அளித்து வருகிறார். கடந்த குடியரசு தின விழாவிற்கு பின்னர் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இணைய தளத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிடுவதை தவித்து வந்தார்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் இந்தூர் சென்றார். நேற்று மாலை விமான நிலையத்தில் இறங்கி தனது செல்போனை சுவிட்ச் ஆன் செய்த போது புரோ தர்க்கீஸ் பாகிஸ்தான் என்ற பெயரில் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வந்தது. கவர்னர் கிரண்பெடியே தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தார்.
இது குறித்து இவர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
2010-ம் ஆண்டு முதல் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதில் பதிவுகளை பதிவிட்டு வந்தேன். இன்று(நேற்று) மாலை இந்தூருக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தேன். விமானம் தரையிறங்கியதும் செல்போனை இயக்கியபோது எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வந்தது.
டுவிட்டர் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன். மேலும் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிரண்பெடியின் டுவிட்டர் பக்கத்தை 25,200 பேர் தொடர்ந்து வருகின்றனர். 4,551 பதிவுகளை இதுவரை அவர் பதிவு செய்துள்ளார். 1,978 பேர் அவரது பக்கத்தை விரும்பியுள்ளனர். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் பலர் அவரது பக்கத்தில் தொடர்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பாகிஸ்தான் நாட்டின் சதிவேலையா? என்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story