பெரம்பலூரில் நடந்த ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்பு
பெரம்பலூரில் நடந்த ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான, ஆண்களுக்கான ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா ஆக்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் முன்னிலை வகித்தார். கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் பிரபலமாக இருக்கிற போதிலும், இந்தியாவின் தேசிய விளையாட்டான ஆக்கியிலும் வியத்தகு சாதனைகளை வீரர், வீராங்கனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஆக்கியில் சிறந்து விளங்கிய இந்தியா தற்போது சறுக்கலை சந்தித்து வருவது கவலையளிக்கிறது. எனவே ஆக்கி வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதற்கு மாவட்ட விளையாட்டுத்துறை உதவிகரமாக இருக்கும் என விளையாட்டுத்துறை அதிகாரிகள் தொடக்க நிகழ்ச்சியின்போது எடுத்துரைத்தனர்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட தனியார் பள்ளி, கல்லூரி சார்பில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிபோட்டியில் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. பசும்பலூர் அரசு பள்ளி அணி 2-ம் இடம் பிடித்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, அன்பரசு, கோகிலா உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இந்த சாம்பியன்ஷிப்போட்டியில் சிறப்பிடம் பிடித்த ஆக்கி அணியை சேர்ந்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த அணியானது, திருச்சியில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டல அளவிலான போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆக்கி அணிகள் பங்கேற்கின்றன.
பெரம்பலூரில் ஆக்கி விளையாடுவதற்கு என தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. பெரம்பலூர் விளையாட்டு மைதான வளாகத்தில் கால்பந்து விளையாடும் இடத்தில் போட்டிகள் நடத்தப்படுவதால் ஆக்கி வீரர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும் மணற்பாங்கில் ஆக்கி மட்டையை சுழற்றும் போது புழுதி பறக்கிறது. ஆக்கி பந்தை லாவகமாக தடுப்பது, மட்டையை சுழட்டி அடிப்பது என நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்த சிரமம் உள்ளது. எனவே புல்வெளியுடன் கூடிய தனி ஆக்கி மைதானம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆக்கி வீரர்கள், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story