சார்பதிவாளர் அலுவலக மொட்டை மாடியில் இருந்து குதித்த பட்டதாரி வாலிபர் படுகாயம்


சார்பதிவாளர் அலுவலக மொட்டை மாடியில் இருந்து குதித்த பட்டதாரி வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Feb 2018 3:45 AM IST (Updated: 7 Feb 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்தை பதிவு செய்ய வந்த போது, சார்பதிவாளர் அலுவலக மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்த பட்டதாரி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மதியம் ஒரு காதல் ஜோடியினர் பதிவு திருமணம் செய்வதற்காக வந்தனர். அப்போது திருமணத்தை பதிவு செய்யும் நேரத்தில் காதலன் அந்த அலுவலகத்தை விட்டு ஓடி, அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி கீழே குதித்தார் இதில் அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். படுகாயமடைந்தவர் திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. முடித்த வாலிபர் என்பது தெரியவந்தது.

வாழமுடியாது

இவர் பட்டதாரி பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நேரத்தில் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழமுடியாது என்று கூறி தப்பியோடுவதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தின் மொட்டை மாடிப்படியில் இருந்து கீழே குதித்தபோது படுகாயமடைந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதலனை மீண்டும் தனது காதலி அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

Next Story