காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு தேசிய விருது
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் 2 விருதுகளை தட்டிச்சென்றது.
காஞ்சீபுரம்,
மத்திய அரசு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினத்தில் இந்தியா முழுவதும் உள்ள சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான விருது, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய நற்சான்று விருது, சிறந்த கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய நற்சான்று விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெவாளருக்கான தேசிய விருதுக்கு இந்தியா முழுவதும் 21 பேரின் பட்டு சேலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சேலை “காலை, மாலை” என்ற ரகத்தில் முந்தானையில் மயில், சக்கரம் ஆகிய வடிவங்களுடன் பாரம்பரிய பட்டு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று விருதுக்கு முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பி.பார்வதி மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தனியார் நெசவாளர் ஆர்.வரதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருது காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், கைத்தறி துணை விற்பனை தேசிய நற்சான்றிதழ் விருது காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு, விருதுடன் ரூ.1½ லட்சமும், தேசிய நற்சான்று விருதுக்கு, ரூ.75 ஆயிரமும், நற்சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுகளை பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ வரும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினத்தில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் 3 விருதுகளை பெற்றதையொட்டி அதன் உறுப்பினர்களை சங்ச தலைவர் வீ.வள்ளிநாயகம், இணை இயக்குனர் எஸ்.சாரதி சுப்புராஜ், துணைத்தலைவர் எஸ்.ஜெயந்திசோமசுந்தரம், இயக்குனர்கள் பி.சம்பத், எஸ்.பாஸ்கர், பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.இளங்கோவன், எஸ்.கீதா சண்முகானந்தம் ஆகியோர் பாராட்டினார்கள்.

Related Tags :
Next Story