விநாயகர் கோவிலை இடிக்காமல் நவீன முறையில் நகர்த்தப்பட்டது
சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விநாயகர் கோவில், நவீன முறையில் இடிக்காமல் நகர்த்தப்பட்டது.
சென்னை,
சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகர் ஸ்ரீராமர்பேட்டை தெருவில் சதுர்புஜ சக்தி விநாயகர் கோவில் உள்ளது. 1945-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலையொட்டி மண்டபம் உள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இக்கோவில் இருக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கோவிலை சுற்றி வலம் வந்து சாமி கும்பிட முடியவில்லையே... என்ற ஏக்கமும் பக்தர்கள் மத்தியில் இருந்தது. மேலும் விஷேச நாட்களில் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவதால் இந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் பக்தர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கோவிலை இடிக்காமல் நகர்த்த, கட்டிடத்தை நகர்த்தும் நிறுவனம் முன்வந்தது. நிறுவன உரிமையாளர் ஆனந்தன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று காலை பணிகளை தொடங்கினர்.
முதல்கட்டமாக கோவிலை சுற்றிலும் 5 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதை தொடர்ந்து கோவிலின் கீழ்தளத்தில் 20-க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் வைக்கப்பட்டு உருளை கட்டைகள் உதவியுடன் கோவில் கொஞ்சம் கொஞ்சமாக பெயர்க்கப்பட்டது. பின்னர் மண்டபத்தின் சுற்றுச்சுவர் லேசாக இடிக்கப்பட்டு, 3 அடி தூரத்துக்கு கோவில் உள்நோக்கி இழுக்கப்பட்டதுடன், 3 அடி உயர்த்தப்பட்டும் நகர்த்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், “கோவில் இடிக்கப்படாமல் நகர்த்தப்பட்டது மகிழ்ச்சி. இனிமேல் நாங்கள் கோவிலை சுற்றி வந்து வழிபட முடியும். பல ஆண்டுகளாக இருந்த எங்கள் மனக்குறை இப்போது நீங்கி இருக்கிறது”, என்றனர்.
கோவிலை இடிக்காமல் நகர்த்த மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டன. மேற்கூரைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. அதை சரிசெய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

Related Tags :
Next Story