பாடகர் சோனு நிகமுக்கு போலீஸ் பாதுகாப்பு


பாடகர் சோனு நிகமுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Feb 2018 4:59 AM IST (Updated: 7 Feb 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

பாடகர் சோனு நிகம் கடந்த ஆண்டு அதிகாலையில் மசூதிகளில் வாங்கு ஒலிப்பது பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

மும்பை,

சோனு நிகமுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது:–

சமீபத்தில் காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாடகர் சோனுநிகம் மற்றும் மும்பையை சேர்ந்த 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்து அவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story