மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் பா.ம.க. கலந்தாய்வு கூட்டம் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு + "||" + PKK in Krishnagiri Consultation meeting Dr. Ramadoss's participation

கிருஷ்ணகிரியில் பா.ம.க. கலந்தாய்வு கூட்டம் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் பா.ம.க. கலந்தாய்வு கூட்டம் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை செயலாளர். சுப.குமார். மாநில துணை தலைவர் மேகநாதன், வன்னியர் சங்க மாநில துணை பொது செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைப்பு செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சங்க நிர்வாகிகள், பாட்டாளி இளைஞர் சங்கம், மாணவர்கள் சங்கம், இளம் பெண்கள் சங்கம், சமூக முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அர்ச்சுனன், ஆறுமுகம், அருண்ராஜன், மாவட்ட தலைவர்கள் வெங்கடேஷ்செட்டியார், ராஜா செட்டியார், கந்தசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் அரிநாஸ்நாயுடு, மாநில இளம்பெண்கள் சங்க துணை செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வரதராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் லட்சுமணன், சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.