10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:31 AM IST (Updated: 8 Feb 2018 8:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, பொள்ளாச்சி வட்ட கிளை துணை தலைவர்கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைதலைவர் சாமி குணம் வாழ்த்துரை வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப பேண்டும், வருவாய் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு செய்ய கோட்ட மற்றும்வட்ட அளவில் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல் உரிய காலத்தில் வழங்கவேண்டும். வறட்சி நிவாரணம், அம்மா திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்குதல், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பணிகளுக்கான சில்லரை செலவிற்கு நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும்.

அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் பணிநியமனம் உடனடியாக வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் துணை கலெக்டர்வரை உரிய விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வுபட்டியல் மற்றும்பணிநியமனம் செய்யவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில், வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தர்ம ராஜ், அய்யப்பன், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரின் போராட்டத்தால் பொள்ளாச்சிசப்-கலெக்டர் அலுவலகம் மற்றும்தாலுகா அலுவலகத்தில் பணிகள் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story