20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:31 AM IST (Updated: 8 Feb 2018 8:31 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை,

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 10-ந் தேதி ஆர்ப்பாட்டமும், 23-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் அருள்முருகன் கூறிய தாவது:-

7-வது ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய குழுவின் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும் பதவி உயர்வு பட்டியலை உரிய தேதி யில் வெளியிட வேண்டும். பங்களிப்பு ஓப்வூதியத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத் தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின்னரும் எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து தலைமை அலுவலகத்தின் அனுமதி பெற்று நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய்த்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங் களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதில் கிராம நிர்வாக ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் ஆன்லைனில் விண் ணப்பிக்கப்பட்டாலும், அவற்றுக்கு வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மற்றும் தாசில்தார்கள் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் நேற்று தற்செயல் விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story