நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு 1,446 பேர் பங்கேற்பு


நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு 1,446 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 8:31 AM IST (Updated: 8 Feb 2018 8:31 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நியாய விலைக்கடை விற் பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 1,446 பேர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நியாய விலைக்கடை விற் பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள 50 காலிப்பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 600 பேர் தகுதியுள்ள விண்ணப்பதாரர் களாக ஏற்கப்பட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான கல்வி தகுதி பிளஸ்-2 வகுப்பு என்ற போதிலும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

1,446 பேர் பங்கேற்பு

இதற்காக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்த 16 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வு நடந்த முதல் நாளான நேற்று 1,446 பேர் கலந்து கொண்டனர். வருகிற 15-ந் தேதி வரை நேர்முக தேர்வு நடைபெறுகிறது. 

Next Story