15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதா கட்சியினர், இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதா கட்சியினர், இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 3:39 AM GMT (Updated: 8 Feb 2018 3:39 AM GMT)

திருப்பூரில் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

மேலும் பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் 1-வது மண்டல பொது செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு காதர்பேட்டையில் குடோன் வைத்துள்ள ராஜாராம் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக அவர் மாதந்தோறும் வட்டியை ராஜாராமிடம் செலுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜாராம் கடந்த மாதம், மருது பனியன் நிறுவனத்திற்கு சென்று வாங்கிய கடன் தொகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது மருது அவரிடம் 6 மாதம் அவகாசம் தருமாறு கூறி உள்ளார். இதையடுத்து ராஜாராம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மருது மற்றும் ராஜாராமை 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். அப்போது மருது, ராஜாராமிற்கு கொடுக்க வேண்டிய ரூ.3 லட்சத்திற்கு பதிலாக ரூ.5 லட்சத்தை 6 மாதத்திற்குள் தந்து விடுவதாக இன்ஸ்பெக்டர் சண்முகம் ராஜாராமிற்கு ஆதரவாக மருதுவை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தலா ரூ.2½ லட்சம் தொகை பூர்த்தி செய்த மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான 2 காசோலையையும் மருதுவிடம் கேட்டு வாங்கி உள்ளனர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து பா.ஜனதா மாநில இளைஞரணி செயலாளர் தங்கராஜ் தலைமையில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் நேற்று 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மத்திய பொருளாதார குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் அங்கு வந்து பா.ஜனதா நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட காசோலைகளை உடனடியாக ராஜாராமிடம் இருந்து வாங்கி மருதுவிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார். இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story