மாவட்ட செய்திகள்

பள்ளியில் தோழிகள் பேசாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The student committed suicide

பள்ளியில் தோழிகள் பேசாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளியில் தோழிகள் பேசாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளியில் நெருங்கிய தோழிகள் பேசாததால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மகள் ஹரினீஸ்வரி(வயது 14). இவர், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ஹரினீஸ்வரி, யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். திடீரென அவர், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார்.


இதை கண்ட அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரினீஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஹரினீஸ்வரியை பள்ளியில் படிக்கும் நெருங்கிய தோழிகள் சிலர் பேசாமல் புறக்கணித்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.