கொழும்புக்கு கடத்த முயற்சி; சென்னை விமான நிலையத்தில் ரூ.9½ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது
சென்னையில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தநிலையில் சென்னையில் இருந்து கொழும்புக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த யூசுப் சாகுல் அமீது(வயது 47) என்பவர் அதில் செல்ல வந்திருந்தார்.
அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது துணிகளுக்கு இடையே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் சவுதி ரியாலும், 1,300 அமெரிக்க டாலர்களும் மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதேபோல கொழும்புக்கு வேறு ஒரு விமானத்தில் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாகீர்உசேன்(46) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் துணிகளுக்குள் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 28,500 சவுதி ரியால்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 2 பேரின் விமான பயணத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் ரத்து செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடத்த முயன்றது ஹவாலா பணமா?, இவர்களிடம் இந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்?. யாருக்காக கடத்திச்செல்ல முயன்றனர்? என விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story