தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் மதுக்கடை இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கிடையே இந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் இந்த கடையை தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் திறக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தடப்பெரும்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி மதுக்கடையை திறக்க கூடாது என்று தடப்பெரும்பாக்கம்- கொடூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story