மாவட்ட செய்திகள்

வாலாஜாபாத் அருகே ஏரியில் தவறி விழுந்த ஓட்டல் ஊழியர் சாவு + "||" + Death of a fallen hotel employee

வாலாஜாபாத் அருகே ஏரியில் தவறி விழுந்த ஓட்டல் ஊழியர் சாவு

வாலாஜாபாத் அருகே ஏரியில் தவறி விழுந்த ஓட்டல் ஊழியர் சாவு
வாலாஜாபாத் அருகே ஏரியில் தவறி விழுந்த ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,

வாலாஜாபாத் ஒன்றித்திற்குட்பட்ட மேல் மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 41). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். குடிபோதையில் இருந்த அவர் வாலாஜாபாத் அடுத்த பூதேரி ஏரியில் தவறி விழுந்தார். இதில் ஏரியில் மூழ்கி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.