கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் கடும் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை
கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டமாக அரசால் கருதப்படுகிறது. இதனை ஆய்வு செய்கையில் விபத்துகளில் ஒரு பகுதி நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படுவதாக தெரியவருகிறது. கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை சாலைகளில் திரிய விடக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தியும் இதனை கடைபிடிக்க யாரும் முன்வருவதாக தெரியவில்லை.
எனவே சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை கைப்பற்றி பொது ஏலத்தில் விடப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story