விவசாயத்தை பாதிக்கும் தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
விவசாயத்தை பாதிக்கும் தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை,

கலெக்டரிடம் மனு
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ராமலிங்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாய தொழிலை நம்பி இருக்கிறோம். மேலும் நாங்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறோம். விவசாயமும், கால்நடைகளும்தான் எங்களின் வாழ்வாதாரம்.
அனுமதி வழங்கக்கூடாது
எங்கள் ஊருக்கு அருகே சாயாமலை குளம் அமைந்துள்ளது. இந்த குளம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது அந்த பகுதியில் ஒரு தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. எந்திரங்கள் மூலம் குளத்தை அழித்து வருகிறார்கள். குளம் நடுவில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன. விவசாயத்தை பாதிக்கும் தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story